இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.? பீஸ்ட் படத்த கலாய்த்த பிரபலம்.. வருத்தத்தில் விஜய் ரசிகர்கள்..!
Author: Rajesh17 May 2022, 11:44 am
தமிழக சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த திரைப்படம் தான் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம். இந்த திரைப்படத்திற்காக, 10 ஆண்டுகளுக்கு பின்னர் புரோமோஷன் புரோமோஷன் செய்வதற்கு, விஜய் பேட்டி கொடுத்தார். அந்த அளவுக்கு இந்த படத்தின் வெளியிட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது படக்குழு.
ரசிகர்களின் பெரும் ஆதரவோடு கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம் விஜய்க்கு 65வது படம், இயக்குனர் நெல்சனுக்கு 3வது படம் ஆகும்.
எனவே அவர் விஜய்யை வைத்து இயக்குவதால் படத்தை நல்ல தரமாக இயக்குவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதற்கு எல்லாம், நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்கள் நெல்சன் ஹிட் படங்களின் லிஸ்டில் இருந்தது தான்.
பீஸ்ட் பட வசூல் பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை. படம் ரூ. 210 கோடி வரை வசூலித்து நஷ்டத்தை முடிந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தான் கொடுத்தது, ஆனால் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பலர் கலாய்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நிஜ பைலட் அதிகாரி சிவராமன் சஜன் என்பவர் விஜய்யின் பீஸ்ட் பட சில காட்சிகளை போட்டு இதில் எனக்கு நிறைய கேள்விகள் உள்ளது என பதிவு போட்டுள்ளார்.
அந்த விமான காட்சிகள் பார்க்க லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது என போட , அதற்கு பலரும் தங்களது விமர்சனங்களை கொடுத்து வர மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த பைலட் போட்ட பதிவின் வீடியோ,
I have so many questions…. pic.twitter.com/zVafb6uAnm
— sajan (@sajaniaf) May 15, 2022