இலங்கை கடல்கொள்ளையர்கள் அராஜகம்… நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் : அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயம்!!

Author: Babu Lakshmanan
16 February 2023, 11:33 am

நாகை : இலங்கை கடல் கொள்ளையர்களால் 7தமிழக மீனவர்களை கத்தி கட்டையால் தாக்கியதில் முருகன் என்பவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்த நாகை நம்பியார் நகரை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான படகில் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர்.

நம்பியார் நகரை சேர்ந்த சந்துரு, மகேஷ், ஆகாஷ், சிவபாலன், முருகவேல், சூரியா ஆகிய 7 மீனவரை இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 படகில் 10 பேர் கத்தி, கட்டையுடன் வந்து தாக்குதல் நடத்தினர்.

இதில் படகு உரிமையாளர் முருகனுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் அவரை சிகிச்சைக்கை நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில், நாகை மீனவர்களிடம் இருந்து திசைகாட்டும் கருவி, வாக்கிடாக்கியை பறித்து சென்றனர்.

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவ கிராமங்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?