பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடத்த திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்ச அன்பில் மகேஷ்..!!
Author: Rajesh5 March 2022, 12:42 pm
மறைந்த முன்னாள் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தாத்தாவும் ஆகிய அன்பில் தர்மலிங்கத்தின் 29வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
திருச்சி வி.என் நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அன்பில் தர்மலிங்கத்தின் படத்திற்கு
அன்பில் பொய்யாமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு நலிந்தோர் மற்றும் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்கான ரூபாய் 3.5 லட்சம் மதிப்புள்ள காசோலை கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையின்றி, மன மகிழ்வுடன், பயமின்றி படித்து தேர்வை எழுத வேண்டும். மன நிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும். கொரோனா காரணமாக ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்று பொதுத்தேர்வு நடைபெறும்.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
0
0