ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம்.. ஆதாரத்துடன் பாஜக புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2024, 2:27 pm

ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகிகப்படுவதாக ஆதாரத்துடன் பாஜகவினர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளளனர்.

மதுரை : விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மாதந்தோறும் நியாய விலை கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் உள்ள சமத்துவபுரத்தில் நியாய விலை கடைகளில் சமீபத்தில் வழங்கப்பட்ட விலையில்லா அரிசி மிகவும் தரம் குறைந்ததாகவும், தண்ணீரில் மிதக்கும் வகையிலும் பிளாஸ்டிக் அரிசி போன்றும் உள்ளதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் அரிசியுடன் வந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் பேசும்போது, மழை காலங்களில் தொற்று நோய் பரவி வரும் இந்த வேளையில் இத்தகைய தரமற்ற அரிசிகளை சமைத்து உண்டால் வயிற்று கோளாறு மற்றும் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாய நிலை உள்ளது என்பதால் ரேஷன் அரிசியில் தொடர்ந்து கலப்படம் செய்யப்பட்டுள்ளது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?