செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்… 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை…!
Author: kavin kumar16 February 2022, 6:26 pm
சென்னை : புழல் அருகே செல்போன் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த 10 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புழல் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரது மகன் சுரேஷ்(16) . இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் அடிக்கடி செல்போனில் ஃப்ரீ பையர் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், பெற்றோர் இதனை கண்டித்து, படிக்க அறிவுறுத்தியதால் மனமுடைந்த சுரேஷ் தனது வீட்டில் அவரது தாயின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கதவு பூட்டப்பட்ட நிலையில், வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.