பீஸ்ட் படத்தை வெளியிடுங்க ப்ளீஸ் : கரூரில் தடை விதிக்க காரணம் என்ன? திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2022, 7:14 pm

கரூர் : பீஸ்ட் படம் திரையிடுவதில் சிக்கல் என திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

திரையுலகின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டையொட்டி முதல் நாளே அதாவது ஏப்ரல் 13 ஆம் தேதியே வெளியாகிறது.

நாளை வெளியாக உள்ள தருணத்தில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகாது என்று, செய்தி வெளியானது.

இந்நிலையில் ஆங்காங்கே அலப்பறை செய்து வரும் விஜய் ரசிகர்கள் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில்., ஆங்காங்கே புதிய உற்சாகத்துடன் காணப்பட்ட விஜய் ரசிகர்கள், தற்போது மிகுந்த மன உளைச்சலிலும், வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட, குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் செயல்படும் இரண்டு திரையரங்குகளில் மட்டும் பீஸ்ட் படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் மன்ற கரூர் மாவட்டத்தலைவர் மதியழகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் அவர்களது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது முதல் நாங்கள், அயராது எதிர்பார்த்து கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தினர் கூட்டு நடவடிக்கை எடுத்து கரூர் மாநகரில் வெளியிட ஏதேனும் முயற்சி செய்ய வேண்டுமென்றும் கேட்டு கொண்டார்.

இந்நிலையில், இதற்கு முன்னர் வந்த மாஸ்டர், அண்ணாத்தே ஆகிய திரைப்படங்களை விட அதிகமாக கூடுதல் விலை கேட்பதினால், எங்களால் திரைப்படம் வெளியிட முடியவில்லை என்று திரைப்பட உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu