தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை பெண்கள் மட்டும் பயிலும் பள்ளியாக மாற்றம் செய்ய வேண்டும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பெற்றோர்கள் வலியுறுத்தல்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பது மற்றும் மேலாண்மை குழுவின் பங்கு என்ன என்பது பற்றி விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு அமைப்பது பற்றிய கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக அரசு பள்ளிகளில் அமைக்கப்படும் பள்ளி மேலாண்மைக்குழு அதன் நடவடிக்கைகள் என்ன அது எவ்வாறு மாணவர்களை வழி நடத்தும் பெற்றோர்களின் பங்களிப்பு என்ன என்பது பற்றி விளக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற பெற்றோர்கள் பெரும்பாலோனோர் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களால் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதோடு மாணவிகளுக்கும் இடையூறாக இருப்பதாகவும், இதனால் சில பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் சூழல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சில பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து இடைநிற்றல் ஏற்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்ததோடு தேவதானப்பட்டியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியை பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக மாற்றி அமைத்தும், ஆண்களுக்கு என்று தனியான பள்ளியை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒருசில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டியது, அதனால் ஆசிரியர்கள் பணி பாதுகாப்புக் கோரி மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் கொடுத்தது சம்பவங்களால் மேலும் பெண் குழந்தைகள் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அப்பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதில் தயக்கம் காட்டும் நிகழ்வு ஏற்பட்டுள்ளதால் பள்ளியை மாணவிகளுக்கான பள்ளியாக மாற்ற வேண்டும் என்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.