4 பாடங்களில் 100க்கு 100… மாவட்ட அளவில் முதலிடம் ; படிப்பில் அசத்திய விவசாயியின் மகளுக்கு குவியும் பாராட்டு..!!!

Author: Babu Lakshmanan
6 May 2024, 1:54 pm

பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் திண்டுக்கல் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பட்டிவீரன்பட்டி விவசாயியின் மகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி கிராமத்தில் என்.எஸ்.வி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த விவசாயி மகேஸ்வரன் (44) – பிரீத்தா (42) தம்பதியரின் மகள் தன்யஸ்ரீ என்பவர் இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகிறார்.

மேலும் படிக்க: சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்… பெற்றோருக்கு போன் போட்டு மிரட்டல் ; கூலி தொழிலாளி போக்சோவில் கைது!!

இந்த நிலையில், இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் திண்டுக்கல் மாவட்ட அளவில், 594 மதிப்பெண்கள் பெற்று மாணவி தன்யஸ்ரீ முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியின் தமிழ் 98, ஆங்கிலம் 96, கணக்கு, 100, இயற்பியல் 100, வேதியல் 100, கணினி அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி தன்யஸ்ரீக்கு பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவியை பாராட்டி கேடயம் வழங்கினர்.

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு, பெற்றோர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

இதுகுறித்து, மாணவி தன்யஸ்ரீ கூறுகையில், “நான் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இந்த பள்ளியில் படித்தேன். எனக்கு பள்ளி முதல்வர், வகுப்பு ஆசிரியர்கள் நன்றாக படிப்பதற்கு ஊக்கப்படுத்தினர். அவர்களால் தான், நான் மாவட்ட அளவில் முதலிடம் பெற முடிந்தது. அதேபோல், எனது பெற்றோர்களும் என்னை ஊக்கப்படுத்தி படிக்க வைத்தனர். நான் எதிர்காலத்தில் இன்ஜினியர் ஆவது எனது லட்சியம். இனி வருங்காலத்தில் என்னைப் போல் மற்ற மாணவ, மாணவிகளும் படிக்க வேண்டும்,” எனக் கூறினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…