ஆசைவார்த்தை கூறி பலாத்காரம்… பின்வாங்கிய காதலன் ; 60 அடி உயர பாலத்தில் இருந்து குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி

Author: Babu Lakshmanan
21 February 2023, 11:50 am

ஆசை வார்த்தை கூறி பலாத்கார முயற்சி செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி 60 அடி உயர ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணை ஆற்றில் இளம்பெண் ஒருவர் 60 அடி உயர பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலிசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. 60 அடி உயர ஆற்றுப்பாலத்தில் இருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது பிளஸ் டூ மாணவி என்பதும் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் மாணவியை காணவில்லை என்றும் இது குறித்து பெற்றோர்கள் பல இடத்தில் தேடியதும் மறுநாள் காலை வீட்டுக்கு வந்ததும் அந்த மாணவியை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர் இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

மேலும் தனியார் பேருந்தில் டிக்கெட் பரிசோதகராக வேலை செய்யும் பாபு என்பவர் திருமண ஆசை வார்த்தை கூறி, கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. இதனையடுத்து, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாபுவை போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

வீட்டிற்கு பயந்து 60 அடி பாலத்திலிருந்து மாணவி ஆற்றில் குதித்ததும், பிளஸ் டூ மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதும் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 918

    0

    0