அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து ஆசிபெற்ற மாணவிகள்… பிளஸ் 2 தேர்வு எழுதச் செல்வதற்கு முன்பு நடந்த சுவாரஸ்யம்..!!

Author: Babu Lakshmanan
13 March 2023, 2:39 pm

விழுப்புரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகள் அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வை எழுத சென்றனர்.

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதும் மாணவிகளுக்கு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதவேண்டும் என்று அறிவுரை கூறினார்.

பின்னர், மாணவிகளுக்கு அனைவருக்கும் நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வி தொடர வேண்டும் என்று கூறி சாக்லேட் மற்றும் பேனாவை அவரது கையால் அனைவருக்கும் வழங்கிய போது மாணவிகள் அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இதே போல விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களை வாழ்த்து தெரிவித்ததுடன் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி உயர் கல்வி பயில வேண்டும், என தெரிவித்தார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 410

    0

    0