என்னது காமராஜர் மாதிரி பிரதமர் மோடியா? அண்ணாமலை கூறிய கருத்து.. வெடித்த சர்ச்சை : அதிமுக மூத்த தலைவர் பதிலடி!!
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குட்டியபட்டியில் ரூ 38 லட்சம் செலவில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று 13.01.24 நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரகப்பிரவேச வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு சாப்பாடு சரியில்லை எனக் கூறுவது போல் என் டி ஏ கூட்டணியில் 9 வருடங்கள் இருந்து விட்டு வெளியே வந்தது தொடர்பாக பாஜக அண்ணாமலை பேசியது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் கூறுகையில் :- அவருடைய கட்சியின் கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார் நாங்கள் ஏன் வெளியே வந்தோம் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக தெரிவித்து இருக்கிறார். திருப்பித் திருப்பி கூற வேண்டிய அவசியம் கிடையாது ஏன் வெளியே வந்தோம் என தமிழக மக்களுக்கும் அதிமுகவினருக்கும் நன்றாக தெரியும்.
கர்மவீரர் காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு :- காமராஜர் யார் மற்றவர்கள் யார் என்பது பொது மக்களுக்கு நன்றாக தெரியும் இது குறித்து நான் கூற வேண்டிய அவசியம் இல்லை.
அயோத்தி கோவில் திறப்பு விழாவிற்கு அதிமுகவுக்கு அழைப்பிதழ் வந்துள்ளது என்பது உண்மைதான். விழாவிற்கு செல்வது குறித்து சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் பாஜக விற்கும் இடையே தான் கடுமையான போட்டி உள்ளது என அண்ணாமலை கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு. ஓட்டு எண்ணும் பொழுது தான் எந்த கட்சி எங்கெங்கே உள்ளது என்பது தெரியவரும்.
கூட்டணிக்கான கதவு திறந்து தான் உள்ளது என அண்ணாமலை கூறியது குறித்த கேட்ட கேள்விக்கு :- அவர் யாருக்கு அனுப்பி விடுத்துள்ளார் என்பது தெரியாது நாங்கள் பிஜேபி கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் என தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.