பிரதமரின் ரோடு ஷோவில் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்ற விவகாரம்… 3 தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு!!

Author: Babu Lakshmanan
22 மார்ச் 2024, 11:20 காலை
Quick Share

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்வில் பள்ளி குழந்தைகளை பங்கேற்க அழைத்து வந்த மூன்று தனியார் பள்ளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சின்மயா மெட்ரிக் பள்ளி, வடவள்ளி சின்மயா சிபிஎஸ்இ பள்ளி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 22 பேர் ரோடு ஷோ நிகழ்வில் பங்கேற்க அழைத்து வரப்பட்டனர். இந்து கடவுள்கள் போல உடையணிந்து, கட்சி சின்னங்கள் மற்றும் காவி நிறத் துணிகளை அணிவித்து ரோடு ஷோ நிகழ்வில் பங்கேற்க வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்திய நிலையில், பள்ளி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வைப்பது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்பதால், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் 3 பள்ளிகள் மீதும் தனித்தனியாக புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மூன்று தனியார் பள்ளிகள் மீதும் தனித்தனியாக குழந்தைகள் நல சட்டம் பிரிவு 75-ன் கீழ் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 322

    0

    0