மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் கொலை செய்யப்பட்ட விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :- தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வயலில் மது அருந்தி, வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்ட அந்த வயலின் உரிமையாளரான சரவணன் என்ற உழவர் குடிகாரர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
பொது இடங்களில் சட்ட விரோதமாக மது அருந்துவது மட்டுமின்றி, அதை தட்டிக்கேட்பவர்களை கொடூரமாக குத்திக் கொலை செய்யும் அளவுக்கு குடிகாரர்களுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியும், கவலையுமளிக்கிறது. இது தான் திராவிட மாடலா? என்ற வினாவும் எழுகிறது.
தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி, தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அரசு நடை முறைப்படுத்த வேண்டும். குடிகாரர்களால் கொல்லப்பட்ட உழவர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
This website uses cookies.