கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது நிலவரப்படி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் வந்து ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.தற்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,
இத்தனை உயிர் பலி நடந்தேறும் வரை அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது? ஆட்சியா நடக்குது இங்க? திமுக அரசுக்கு உயிர் முக்கியம் இல்லையா கள்ளச்சாராயத்தால் வரும் பணம் தான் முக்கியமா? நடந்தேறிய நிகழ்வுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் ஐஏஎஸ் அதிகாரியை தற்போது வரை சஸ்பெண்ட் செய்யவில்லை. கலெக்டர் மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கினால் தான் இப்படிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.சிபிசிஐடி மட்டும் இந்த வழக்கில் விசாரிக்க போதுமானதாக இருக்காது ஏனென்றால் ஆளும் கட்சி தான் இதில் மிகப்பெரிய முக்கிய புள்ளி. எனவே சிபிஐ விசாரணை தான் இந்த சம்பவத்திற்கு தேவை. அரசாங்கம் அதனை உடனடியாக செய்ய வேண்டும் 1971 இல் மதுவை மறந்து இருந்த தமிழகம் மீண்டும் குடிகார மக்களாக மாறியதற்கு கலைஞர் தான் முதலில் காரணம். மது அருந்துவதால் ஒரு வருடத்தில் இரண்டு லட்சம் மரணங்கள் ஏற்படுகிறது அரசின் வருமான இலக்கை மது விற்பனையில் நிர்ணயிபது?கல்வி, விவசாயத்தில் இலக்கை நிர்ணயித்தால் நம் தமிழ்நாடு எங்கு போயிருக்கும். நாமக்கல்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டம் தான் தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டம் ஆனால் டாஸ்மார்க் கடைகள் மற்றும் மது விற்பனையில் இந்த மாவட்டங்கள் தான் முதலிடம்.
தமிழகத்தை பார்த்து சந்தி சிரிக்கிறது!. இந்த அவமானம் திமுக அரசுக்கு புரிகிறதா இல்லையா?.காவல் நிலையத்திற்கு அருகிலும் அரசு அலுவலகங்களுக்கு அருகிலும் தான் மது விற்பனை நடந்துள்ளது.ஆனால் முதல் தகவல் அறிக்கையில் சுடுகாடு பக்கத்தில் நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதில் எங்கு நேர்மையான விசாரணை உள்ளது? இது சம்பந்தமான அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.எ.வ.வேலுவின் சொந்த ஊரான திருவண்ணாமலை தற்போது கஞ்சா வியாபாரத்தில் முதலிடமாக மாறி உள்ளது.தற்போது இருக்கும் திமுக நிர்வாகிகள் அனைவரும் நிர்வாகிகள் அல்ல வியாபாரிகள் என்று தான் சொல்ல வேண்டும்.ஸ்டாலினின் மதுவிலக்கு அறிவிப்பு என்ன ஆனது? அவர் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லை. இது குறித்து நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த போகிறோம்.தமிழகத்தில் சமூக நீதி, வாழ்வாதார பிரச்சனைகள் தான் ஏராளம்.அதனை முதலில் சரி செய்ய வேண்டும்.மெத்தனாலின் பாதிப்பு ஒரு வாரத்திற்கு பிறகு கூட உயிர் இழப்பை ஏற்படுத்தும்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முதலில் ஆன்டிடோஸ் கொடுக்க வேண்டும். ஆனால் அது தமிழகத்தில் பற்றாக்குறையாக உள்ளது ஆகவே திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று ஆவேசமாக பேட்டி அளித்தார்.
0
0