‘எனக்கும் தோட்டம் கொத்த தெரியும்’… விவசாயப் பணி செய்து வாக்குசேகரித்த சௌமியா அன்புமணி!!!

Author: Babu Lakshmanan
11 April 2024, 12:57 pm

எனக்கும் தோட்டம் கொத்த தெரியும், களை எடுக்க தெரியும், வாங்க களை எடுப்போம் என வயலில் இறங்கி பெண்களுடன் தோட்ட வேலை செய்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் செளமியா அன்புமணி வாக்கு சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள, போதக்காடு கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் இருந்த தக்காளி தோட்டத்தில் களை கொத்திக் கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களிடம் சென்ற பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, எனக்கும் தோட்டம் கொத்தி களை எடுக்க தெரியும், வாங்க களை எடுப்போம் என வயலில் இறங்கி பெண்களுடன் தோட்ட வேலை செய்து களை எடுத்து கொண்டே வாக்குசேகரித்தார்.

மேலும் படிக்க: பாஜக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு… அலுவலகத்திலும் புகுந்து சோதனை… தொண்டர்கள் ஷாக்..!!

இப்பகுதியில் தக்காளி தொழிற்சாலை கொண்டு வருவேன், விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது பாமக தான். ஜல்லிக்கட்டில் வெற்றி பெரும் நபர்களுக்கு டிராக்டர் கொடுக்க வேண்டும் என கூறியவர் பாமக தலைவர் அன்புமணி தான். ஆகையால் விவசாயம் செழிக்க மாம்பழம் சின்னத்துல வாக்களியுங்கள், என கேட்டு வாக்கு சேகரித்தார்.

மேலும், அதே பகுதியில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களிடையே வாக்கு சேகரித்தார் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 277

    0

    0