தமிழக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாலரும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்ட திலகபாமா திண்டுக்கல்லில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு விட்டது எங்கு பார்த்தாலும் கஞ்சா ,போதைப் பொருள் விற்பனை தாராளமாக விற்பனையாகிறது. சந்து சந்துக்கு மது விற்பனை நடைபெறுகிறது.
தற்போது சில்லிங் என்ற பெயரில் அனைத்து பகுதிகளிலும் மதுபானம் மற்றும் போதை பொருள் கஞ்சா விற்பனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது திண்டுக்கல் மாவட்டத்தில் முழுவதும் இதே போல் போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: பாஜக ஆபிசுக்கு எப்போ வரீங்க..? முன்கூட்டியே சொன்னால் பரிசு கொடுக்க தயாரா இருப்போம் : காங்கிரசுக்கு அண்ணாமலை பதிலடி!
மேலும் அனுமதி இல்லா மதுபான பார்கள் இயங்கி வருகின்றன. அதேபோல மனமகிழ்த மன்றம் என்ற பெயரில் சீட்டு விளையாட்டு கிளப் ஒவ்வொரு பகுதிகளிலும் பெருகிவிட்டது.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது யாரிடம் புகார் அளித்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. அதேபோல் மண் கொள்ளை,மணல் கொள்ளை என ஆறுகளையும் நீர் நிலைகளையும் முற்றிலும் அழித்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதிக்கு பிறகு போதை பொருளை விற்பனை தடுக்கும் வகையிலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வரும் தமிழக அரசை கண்டித்தும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தற்போது போட்டியிட்டு உள்ளேன். இதில் மக்களின் வரவேற்பு மற்றும் அவர்களின் பிரச்சனை குறித்து என்னிடம் பல்வேறு பகுதிகளில் புகார் மனுக்கள் அளித்தனர்.
இதன் காரணமாக திண்டுக்கல்லிலேயே வீடு பிடித்து இன்று பால் காய்ச்சி இன்றிலிருந்து தங்க உள்ளேன். திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் பொதுமக்கள் என்னை நேரடியாக சந்தித்து புகார் மனுக்களை கொடுக்கலாம் என கூறினார்.
திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள நடுப்பட்டியில் நடைபெற்ற கொலை சம்பவத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சில அமைப்புகள் ஜாதிய மோதலாக உருவாக்க முயன்றனர் ஆனால் அந்த விஷயத்தில் காவல்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்து பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளது அது பாராட்டத்தக்கது என தெரிவித்தார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.