‘மேரே நாம் சௌமியா அன்புமணி’… இந்தியில் பேசி வாக்கு சேகரித்த தர்மபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளர்…!!

Author: Babu Lakshmanan
28 March 2024, 12:16 pm

‘மேரே நாம் சௌமியா அன்புமணி’… இந்தியில் பேசி வாக்கு சேகரித்த தர்மபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளர்…!!

தர்மபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, இஸ்லாமிய மக்களிடையே ஹிந்தியில் பேசிவாக்கு சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி தர்மபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முக்கிய பொறுப்பாளர்களை சந்தித்து தனக்கு ஆதரவு வழங்கும் படி வாக்கு சேகரித்தார்.

அதே போல் நேற்று இரவு கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதியான சத்யா நகர் பகுதிக்கு நேரில் சென்ற அவர், தங்கள் அனைத்து குறைகளையும் சரி செய்வேன் எனவும், எந்த குறைகளாக இருந்தாலும் அதை நேரடியாக என்னிடம் தெரிவிக்கலாம் என அவர் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஹிந்தியில் பேசிய அவரை பார்த்து வியந்த இஸ்லாமிய பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களது வாக்குகள் அனைத்தும் உறுதியாக சௌமியா அன்புமணிக்கு வழங்குவதாக உறுதி அளித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…