திடீர் என்ட்ரி கொடுத்த திலகபாமா… தெறித்து ஓடிய திமுக கவுன்சிலர் ; சம்பவ இடத்தில் வந்த போலீசார்..!!!

Author: Babu Lakshmanan
17 April 2024, 4:59 pm

பூத் ஸ்லிப் வழங்குவதாக கூறி பண பட்டுவாடா செய்வதாக, சம்பவ இடத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா சென்றதால், திமுக கவுன்சிலர் அங்கிருந்து ஓடியதாக சொல்லப்படுகிறது.

19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி திண்டுக்கல்லில் கடைசி கட்ட பிரச்சாரம் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் திலகபாமா காலை 7 மணி முதல் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காலை 10 மணிக்கு திண்டுக்கல் பழனி சாலையில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

அதேபோல், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு எம்எஸ்பி பள்ளி எதிரே திமுக வார்டு கவுன்சிலர் சேகர் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் மற்றும் பண பட்டுவாடா செய்வதாக தகவல் வந்தது. இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திலகபாமா, தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக சென்று திமுக வார்டு கவுன்சிலர் சேகரிடம், “எதற்காக நீங்கள் பூத் ஸ்லிப் வழங்குகிறீர்கள்..? பணப்பட்டு வாடா செய்கிறீர்களா…?” என்று கேட்டதற்கு தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு வேட்பாளர் தலைவர் திலகபாமா தகவல் அளித்ததை அடுத்து அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாகவும், அதற்கு உடந்தையாக திமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேட்பாளர் திலகபாமா கோரிக்கை விடுத்தார்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!