அறிவாலயத்தில் சுயமரியாதையை அடகு வைத்த அமைச்சர்… பாமக பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2024, 4:30 pm

அன்புமணி ராமதாஸை விமர்சித்த அமைச்சர் சிவசங்கருக்கு பாமக பதிலடி தந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் சுயமரியாதையை அடகு வைத்த அடியாள்தான் அமைச்சர் சிவசங்கர் என்று பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி விமர்சித்துள்ளார்.

பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நாளை எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக உள்ளேன்.

தி.மு.க.வுக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றேன்.

ஆதரவு அளித்தால் வன்னியர்களுக்கான 15% இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க. அணியிலிருந்து பா.ம.க. வெளியேறினால், உடனடியாக அதிலிருந்து விலகி விடுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவராக இருந்தேன் எனத் தெரிவித்தார்.
பா.ம.க.விலிருந்து கேள்விகள் எழுப்பினால், தி.மு.க. வன்னியர் மூலம் பதில் அளிப்பதை கலைஞர் போலவே ஸ்டாலினும் தொடர்ந்துள்ளார். பா.ம.க.வில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வர முடியும் என அவர் குறிப்பிட்டார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 71

    0

    0

    Leave a Reply