எந்த வசதியும் இல்லாமல் தவிக்கும் மலை கிராமம்… இரவில் மக்களுடன் தங்கி ஆய்வு : இருளில் இருந்து மீட்க போராடும் பா.ம.க எம்எல்ஏ!

Author: Udayachandran RadhaKrishnan
8 பிப்ரவரி 2024, 9:42 மணி
Pmk mla
Quick Share

எந்த வசதியும் இல்லாமல் தவிக்கும் மலை கிராமம்… இரவில் மக்களுடன் தங்கி ஆய்வு : இருளில் இருந்து மீட்க போராடும் பா.ம.க எம்எல்ஏ!

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, மிட்டாரெட்ஹள்ளி ஊராசிக்கு உட்பட்ட கோம்பேரி கிராமம் உள்ளது. இதன் அருகே, 2.5 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பகுதிகளுக்கு நடுவே, பையன்குட்டை, கஜமான் குட்டை, ஒட்டன்கொள்ளை, மன்னன் கொள்ளை, வாழைமரத்து கொட்டாய் உள்ளிட்ட, 5 கிராமங்கள் உள்ளது. இங்கு, 100 குடும்பங்களில், 300- க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், 400 ஏக்கர் பரப்பளவில் பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆனால், அப்பகுதிக்கு இதுவரை சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லாம் இருளில் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு தர்மபுரி எம்.எல்.ஏ., எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அப்பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிய சென்றார்.

அதில் முதற்கட்டமாக, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், 15 லட்சம் மதிப்பில், 20 இடங்களில் அமைக்கபட்ட சோலார் மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதன்பின், அங்குள்ள வீடுகளுக்கு சென்று, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதில் குடிநீர் வசதி இல்லாமல் தவிக்கிறோம், அதனை ஏற்பாடு செய்து கொடுங்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை, கோம்பேரி பகுதியில் இருந்து, பொம்மிடி அருகே உள்ள காளிகரம்பு பகுதிக்கு வனப்பகுதி வழியாக சென்று ஆய்வு செய்தார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கொம்பேரி மற்றும் காளிகரம்பு பகுதிக்கு, இடையிலுள்ள வனப்பகுதியில், 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைத்தால், மணலூர், கொப்பகரை, பொம்மிடி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள், 12 கிலோ மீட்டர் பயணத்தில் தர்மபுரிக்கு வர முடியும். இதனால், 50 கிலோ மீட்டர் சுற்றி வரும் அவலநிலை இருக்காது.

மேலும், நல்லம்பள்ளி, மிட்டாரெட்டிஹள்ளி, நார்த்தம்பட்டி, பகுதி பொதுமக்கள், இந்த சாலை மூலம், பொம்மிடி ரயில் நிலையத்திற்கு எளிதில் சென்றடைந்து, அங்கிருந்து கோவை, சென்னை, உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் செய்யலாம்.

இது குறித்து, வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் இப்பகுதிக்கு, சாலை அமைக்கப்படும் எனவே, இப்பகுதி மக்களுக்கு கூடுதலாக தேவைப்படும் உதவிகள் குறித்து, இரவு முழுவதும் இங்கேயே தங்கி, அவர்களின் வீடுகளுக்கு சென்று குறைகளை கேட்டறிந்தேன் என, கூறினார்.

  • seeman vs vijay கேவலப்படுத்திய சீமான்… கூடிய கூட்டம் : விஜய் எடுத்த அதிரடி முடிவு..நாளை முக்கிய அறிவிப்பு!
  • Views: - 466

    0

    0