திமுக நிர்வாகிகள் போல் செயல்படும் காவல்துறை : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

Author: kavin kumar
18 February 2022, 8:41 pm

கரூர் : காவல்துறையினர் நடுநிலையோடு செயல்படாமல் திமுக கட்சி நிர்வாகிகள் போல் செயல்படுவதாகவும், திமுக தேர்தல் வேலைகளையும் அவர்களே பார்ப்பதாகவும் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று மாலை திடீரென்று தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் திடீரென்று சோதனை நடத்தியுள்ளனர். பின்பு எந்த ஒரு ஆபரணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் வெறுங்கையுடன் வெளியேறினார். இதற்கு முன்னதாக கரூர் காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் திடீரென்று கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினருடன் உள்ளே நுழைய முற்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர், காவல்துறையால் ஏவல் துறையா ? திமுகவினர்களின் வேலையை செய்வது தான் காவல்துறையினரின் வேலையா என்று கோஷங்கள் எழுப்ப, காவல்துறையினர் திரும்ப சென்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில்,” கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் அதிமுக நிச்சயம் கைப்பற்றும் என்று நினைத்துதான். திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கூறியதெல்லாம் நடைபெறுகின்றது. காவல்துறையினர் நடுநிலையோடு செயல் படாமல் திமுக கட்சி நிர்வாகிகள் போல் செயல்படுகின்றனர். திமுக தேர்தல் வேலைகளையும் காவல்துறையின்ர் பார்க்கின்றனர். தேர்தல் அதிகாரிகளும் நடுநிலையோடு செயல்பட வேண்டும்,

கரூர் மாவட்டத்தில் ஆங்காங்கே வாக்காளர்களுக்கு ரூபாய் 2000 திமுகவினர் கொடுத்து வருவதை தடுக்க முடியாத தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு பந்தகம் விளைவிக்கும் வகையில், காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றார். இதுமட்டுமல்லாமல், தேர்தல் ஆணையமே திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், எப்படி கோவையில் 10 எம்எல்ஏக்களை கைது செய்து அராஜகம் செய்த திமுகவினர் மற்றும் காவல்துறையினர்,

கோவையை தொடர்ந்து கரூரிலும் அரங்கேற முயற்சித்துள்ளனர். ஆகவே மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். இந்த முறை எப்படியும் அதிமுக கரூர் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து இடங்களையும் கைப்பற்றும் என்றார். அப்போது மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், கரூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுப்பிரமணி, மூத்த வழக்கறிஞர் மாரப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

  • Choreographer opens up about Silk Smitha's marriage to celebrity's son பிரபலத்தின் மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து நடன இயக்குநர் ஓபன்!