மது குடிப்பதற்காக ரூ.1.50 லட்சம் செல்போனை திருடி ரூ.500க்கு விற்ற போதை ஆசாமிகளை பிடித்து சென்றும் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக பாதிக்கப்பட்ட இளைஞர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சலீம் ( 28) என்ற பி.காம் பட்டதாரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருக்கக்கூடிய ஹோட்டல் எவரெஸ்ட்டின் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மே மாதம் 1ம் தேதி அதிகாலை வேளையில் மேலாளர் டேபிளில் தனது ரூபாய் 1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனை வைத்துவிட்டு, அதன் அருகிலேயே சலீம் உறங்கியுள்ளார். தூங்கி எழுந்து பார்த்தபோது தனது விலை உயர்ந்த செல்போன் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் விடுதிக்கு உள்ளே வந்து அவரது செல்போனை திருடி செல்வது பதிவாகியிருந்தது. சிசிடிவி ஆதாரங்களோடு பெரியமேடு காவல் நிலையத்திற்கு சென்ற அவரிடம் 4 நாட்கள் அலைக்கழித்த பிறகு, 5வது நாள் புகாரை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், சலீம் காவல் நிலையம் சென்று கேட்டபோதெல்லாம் திட்டி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதனால் சலீம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் தனது செல்போன் திருட்டு சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
புகாரில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தனது செல்போனை திருடி சென்ற நபரை கண்டறியும் வேலையில் சலீம் தானே இறங்கியுள்ளார். பணி நேரம் முடிந்த பிறகு கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தி.நகர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் அலைந்து சிசிடிவி காட்சிகளில் பதிவான நபரை தேடி அலைந்து உள்ளார்.
இந்த நிலையில், நேற்றுறு காலை 7:30 மணியளவில் தி.நகர் பேருந்து நிலையத்தில் தனது செல்போனை திருடி சென்ற நபரை கண்டறிந்து சலீம் பிடித்து விசாரித்துள்ளார். அதில், அந்த நபர் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
தன்னுடைய 1.5 லட்சம் மதிப்புடைய மொபைல் போனை வேறொரு நபரிடம் கொடுத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்ததை கேட்டு சலீம் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் திருடிய நபரை ஆட்டோவில் ஏற்றி நேரடியாக செண்ட்ரல் ரயில் நிலையம் சென்ற சலீம், அங்கு செல்போன் விற்றுக் கொடுத்த நபரையும் பிடித்துள்ளார். பின் இருவரையும் பெரியமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பெரியமேடு காவல்நிலையம் சென்ற சலீம், செல்போன் திருடிய நபரை தானே பிடித்து விட்டதாகவும் தனது செல்போனை மீட்டு தருமாறும் பெரியமேடு போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை அலட்சியம் செய்த பெரிய மேடு காவல்துறையினர், காவல் நிலைய போலீசார் வெளியில் சென்று விட்டதால் பிடித்த நபர்களிடம் செல்போன் நம்பர் மற்றும் முகவரியை வாங்கிவிட்டு அனுப்பிவிடு பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ED-ஐ கேட்காமல் வழக்கை விசாரிக்க முடியாது… கோரிக்கை நிராகரிப்பு ; செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்!!
இதனையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு செல்போன் திருடர்களை அழைத்து வந்து நேரடியாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், பெரியமேடு காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இந்த விவகார தெரிய வந்ததை தொடர்ந்து அவசர அவசரமாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர்களை சந்தித்த சலீம், ”புகார் அளிக்க சென்றபோது என்னை நான்கு நாட்கள் அலைக்கழித்து பின் ஐந்தாம் நாள் தான் வரச் சொன்னார்கள். நான் எழுதிய புகாரை கிழித்து போட்டுவிட்டு செல்போன் திருடு போகவில்லை காணாமல் போய்விட்டதாக
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
This website uses cookies.