இது உன் மனைவியா..? ‘Marriage Certificate-அ காட்டு’… ஆண் நண்பர்களுடன் காரில் வந்த பெண்… போலீசார் காட்டிய கண்டிப்பு!!
Author: Babu Lakshmanan25 April 2024, 10:33 am
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்த பெண்ணிடம் திருமண சான்றிதழை கேட்டு போலீசார் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரில் ஒரு இளம் பெண் மற்றும் மூன்று வாலிபர்கள் இருந்துள்ளனர். குருந்தன்கோடு பகுதியில் வந்த போது, அந்த காரை குமரி மாவட்ட போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: எண்ணூர் துறைமுகத்தில் திடீரென காணாமல் போன சீன மாலுமி… சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ; போலீசார் விசாரணை!!
மேலும் அந்த காரில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது உடன் இருந்தவர் தனது கணவர் என கூறி உள்ளார். அதற்கு போலீசார் திருமணத்திற்கான ஆதாரத்தை காட்டுமாறு கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காரில் இருந்த இளைஞர்களும் அந்த இளம் பெண்ணும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.