திருமண ஆசைக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் : இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய காவலர் கைது..!!
Author: Babu Lakshmanan27 March 2023, 1:46 pm
கமுதி அருகே இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த தனி ஆயுதப்படை காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வலையபூக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகன் இளையராஜா. இவர் கமுதி தனி ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாயற்றி வருகிறார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த வெட்டுப்பெருமாள் மகள் ரத்தினா தேவியும் (25)கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். திருமண ஆசைக் கூறி ரத்தினா தேவியுடன் இளையராஜா பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளையராஜாவிடம் ரத்தினாதேவி பலமுறை வற்புறுத்தியுள்ளார். ஆனால் இளையராஜா திருமணம் செய்து கொள்ள முடியாது, என மறுத்து கொலை மிரட்டல் கொடுத்ததாக ரத்தினாதேவி கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கமுதி போலீசார் தனி ஆயுதப்படை காவலர் இளையராஜா மீது வழக்கு பதிந்து, கைது செய்தார்.
இந்த நிலையில், காவலர் இளையராஜாவை மாவட்ட காவல்துறைப்பாளர் தங்கதுரை அவர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.