இவங்களே திருடு வாங்கலாம்.. இவங்களே கண்டுபிடிப்பாங்களாம்.. கார்களைத் திருடும் கொள்ளை கும்பலை தட்டி தூக்கிய போலீஸ்..!

Author: Vignesh
9 July 2024, 10:31 am

கோவையில் கார்களை திருடி, கண்டுபிடித்து தருவதாக கூறி மிரட்டி பணம் பறித்து வந்த நூதன கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த கார்களை வாடகைக்கு எடுத்து கோவை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடமானம் வைத்து ஏமாற்றியது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 22.06.2024 ம் தேதி இரவு 08:00 மணிக்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த K.H நவாஸ் என்பவர் கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் கடந்த 20.03.2024 ம் தேதி தனக்கு சொந்தமான KQ 45 X 5136 என்ற பதிவு எண் கொண்ட சிவப்பு கலர் மாருதி பீரிசா கார் மற்றும் KL 17R 7912 என்ற பதிவு எண் கொண்ட வெள்ளை கலர் மாருதி பலினோ கார் மற்றும் KL 47 K 7006 சிகப்பு கலர் மகேந்திரா தார் காரில் நவாசும் அவரது குடும்பத்தினருடன் கோவைக்கு வந்து கோவை குற்றாலம், ஈஷா யோகா மையம் போன்ற பகுதிகளுக்கு சென்று விட்டு செல்வபுரம் சிவாலாய சந்திப்பு ஐடியல் பேக்கரி அருகில் நிறுத்தப்பட்ட கார் திருட்டு போய் விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல், தமிழ்நாடு கோவையை சேர்ந்த ஒரு கும்பல் சேர்ந்து திட்டமிட்டு திருட்டு குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டதில் கரும்புகடையை சேர்ந்த முகமது யாசீர், அசாருதீன், முகமது யூசுப், ஜான்சுந்தர் ஆகிய நான்கு பேரை போலீசார் கடந்த 28.06.2024 ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அப்பாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசாரின் தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கில் கைதான நபர்களுடன் மேலும் சிலர் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.

மேலும், கேரளாவில் இயங்கி வரும் கும்பலில் உள்ளவர்கள் அங்கு இருக்கும் சொகுசு கார்களை அதன் உரிமையாளர்களிடம் இருந்து வாடகைக்கு எடுத்து கொண்டு அவர்களுக்கு தெரியாமல் கோவைக்கு வந்து கரும்புகடையில் உள்ள ரியாசுதீன் மற்றும் தௌபீக் என்பவர்களிடம் அடமானம் வைத்து பணம் பெற்று கொள்வதும் அந்த கார்களில் உள்ள GPS கருவியை துண்டித்து அகற்றியும், வாகனத்தின் நெம்பர் பிளேட்டையும் கழட்டி எடுத்து அதற்கு பதிலாக யாரும் கண்டுபிடிக்க முடியாத படி குற்றவாளிகள் புதியதாக GPS யை பொருத்தியும் எதிரிகளின் கூட்டாளி ஜான்சுந்தர் என்பவரது ஒர்க் ஷாப்பில் வைத்து புதியதாக பெயிண்டிங் செய்து கலரை மாற்றி காரை விற்கும் தொழில் செய்து வந்து உள்ளது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேலும், விற்ற கார்களில் பொருத்தி உள்ள GPS யை கருவியை கொள்ளையர்கள் TB Track என்ற செல்போன் செயலி மூலம் கார்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்து உள்ளனர். பின்னர் காரின் உண்மையான உரிமையாளர்களுக்கு தகவல் காணாமல் போன கார் எங்கு உள்ளது என்பது எங்களுக்கு தெரியும் நேரில் வந்தால் உங்களுக்கு உதவுவதாக கூறி வரவழைத்து பின்னர் அவர்களை மிரட்டி பணம் பெற்று கொண்டு கார் இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு நூதன முறையில் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்து உள்ளது.

மேலும், இவ்வழக்கில் அப்பாஸ் என்பவனை கடந்த 1.07.2024 ம் தேதியும், அதை தொடர்ந்து 07.07.2024 கரும்புகடையை சேர்ந்த ரியாசுதீன் என்ற ரியாஸ் மற்றும் முகமது வஹாப் என்ற தௌபீக்கும் கைது செய்யப்பட்டும் செல்வபுரம் காவல் நிலைய எல்லையான சிவாலயா சந்திப்பு அருகில் கடந்த மார்ச் மாதம் கொள்ளையர்கள் திருடிய மூன்று கார்களும் மீட்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 291

    0

    0