பாம்பை சமைத்து சாப்பிட்ட திருப்பத்தூர் Beargrills.. வீடியோ வைரலான நிலையில் தட்டி தூக்கிய வனத்துறை..!

Author: Vignesh
12 June 2024, 12:14 pm

திருப்பத்துறை அடுத்த பெருமாபட்டு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரைப்பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின்படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வனவர் மற்றும் வனப்பணியாளர்கள் இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பெருமாபட்டு கிராமத்திற்கு சென்று ராஜேஷ்குமாரை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், நடைபெற்ற விசாரணையில் சாரைப்பாம்பை தோலுரித்து அதனை சமைத்து கரியாக்கி சாப்பிட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.

arrested

எதற்காக இப்படி செய்தாய் என கேட்ட அதிகாரிகளிடம் அப்படி சாப்பிட்டால் உடல் பலம் பெறும் ஆண்மை அதிகரிக்கும்னு சொன்னாங்க, அதனால் பாம்பை தேடிப் பிடித்து அடித்து சாப்பிட்டேன் என கூறியதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Eiffel Tower Fire Incident நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
  • Views: - 273

    0

    0