பள்ளிக் குழந்தைனு கூட பாக்காம.. இதுல காக்கிச் சட்டை வேற : கரூரில் பயங்கரம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2025, 5:51 pm

பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி மாணவி கொடுத்த புகாரின் பேரில் காக்கிச்சட்டையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இதையும் படியுங்க: சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்த சித்தப்பா… வைரலான வீடியோ.. வெடித்த சர்ச்சை!!

இளவரசன் கரூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், வெங்கமேடு காவல் நிலைய காவலர் இளவரசனை போக்சோ வழக்கில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police Arrest in Pocso

இளவரசன் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவரை தாக்கிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின் மீண்டும் காவலர் பணிக்கு திரும்பியவர் என்று கூறப்படுகிறது.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!
  • Leave a Reply