50 ஆண்களை வலையில் விழ வைத்த ‘கல்யாண ராணி’… சத்யாவை காட்டிக் கொடுத்த சிக்னல் : பரபர பின்னணி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2024, 7:55 pm

50 ஆண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக கூறப்படும் கல்யாண ராணி சத்யாவை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரத்தை சேர்நத் மகேஷ் அரவிந்த் என்பவர் திருமணம் செய்து ஏமாற்றிய சத்யா என்ற பெண் மீது பரபரப்பு புகார் அளித்தார்.

அந்த புகாரில் சத்யா என்ற பெண் செல்போன் ஆப் மூலம் பழக்கம் ஆனதாகவும், இருவரும் செல்போன் எண்ணை மாற்றி பேச தொடங்கி அது காதலாக மாறிய, கடந்த மாதம் 21ஆம் தேதி திருமணம் செய்ததாகவும் கூறினார்.

பின்னர் வீட்டிற்கு சத்யாவை அழைத்துவந்த போது மகேஷ் உறவினர்கள் 12 சவரன் நகைகளை கொடுத்து மருமகளை அழகு பார்த்தனர். பின்னர் சத்யாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சத்யாவை கண்காணிக்க தொடங்கிய சத்யா, பின்னர் அவர் செல்போனில் பல ஆண்களுடன் உள்ள புகைப்படங்களையும், பல ஆண்களுடன் அடிக்கடி பேசுவதும் தெரியவந்தது.

இதைக் கண்டித்துள்ளார் மகேஷ். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத சத்யா ஒரு நாள் மாயமாகினார். இது குறித்து தாராபுரம் காவல்நலையத்தல் புகார் அளித்த பின்பு தான் போலீசார் வலை வீசி சத்யாவை தேட தொடங்கினர்.
மேலும் அவரது செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து போலீசார் கண்காணித்தனர். அப்போது சத்யா புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் சத்யாவை கைது செய்துள்ளனர்.

தற்போது கைதாகி உள்ள சத்யா 15 பேரை திருமணம் செய்துள்ளதாகவும், மேலும் 30க்கும் மேற்பட்டவர்களிடம் காதலிப்பது போல் பேசி பணமோசடி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 452

    0

    0