டீ குடிக்கச் சென்ற மாணவி.. சென்னை ஐஐடி கேண்டீனில் அருவருக்கத்தக்க சம்பவம்!

Author: Hariharasudhan
15 January 2025, 12:09 pm

சென்னை ஐஐடி கேண்டீனில் டீ குடிக்கச் சென்ற மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவி ஒருவர், வளாகத்தில் உள்ள கேண்டீனில் டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அந்த மாணவியிடம் கேண்டீனில் பணியாற்றி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது.

எனவே, இது குறித்து ஐஐடி மாணவி நேரடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், சென்னை ஐஐடிகேண்டீனில் பணியாற்றி வரும் ஸ்ரீராமை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீராமிடம் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.

முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்தரப்பு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

IIT Madras Canteen Sexual assault

குறிப்பாக, மாணவி புகாரில் குறிப்பிட்ட சார் என்பது யார் என்பதைக் கேட்கும் வகையில் ‘யார் அந்த சார்’ என்ற கேள்வியை அதிமுக தொடர்ந்து எழுப்பி வருகிறது. இதனிடையே, இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: சென்னையைத் தொடர்ந்து புதுச்சேரி.. பல்கலை வளாகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி?

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பெண்களைப் பின் தொடர்ந்தாலே 5 ஆண்டுகள் வரை சிறை வைக்கும் வகையில் சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி