இதுவரை 6 பேர் கைது.. ஈசிஆர் சம்பவத்தில் முக்கியப் புள்ளிகளா?

Author: Hariharasudhan
31 January 2025, 11:14 am

சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களைத் துரத்திய சம்பவத்தில் இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) உள்ள முட்டுக்காடு பகுதியில், இரண்டுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள், கடந்த ஜனவரி 25ஆம் தேதி இரவு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற காரை, இரண்டு கார்களில் வந்த சில இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்துள்ளனர்.

மேலும், இளம்பெண்களையும், அவருடன் வந்தவர்களையும் அச்சுறுத்தும் வகையில் நடுரோட்டில் காரை மறித்து, அவர்களின் காரை நோக்கி ஓடி வந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், தங்கள் காரை ரிவர்ஸ் எடுத்து தப்பிக்க முயன்றனர். அப்போது, அந்த கும்பலும் தங்களது கார்களில் விரட்டி வந்தனர்.

மேலும், திமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் வந்த அந்த இளைஞர்கள், காரில் வந்த இளம்பெண்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி கடும் எதிர்வினைகளைச் சந்தித்தது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக காரில் பயணித்த பெண், கானத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

Six arrested in ECR Chasing incident

இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஈசிஆர் சாலையில் காரை நிறுத்தி இளம்பெண்களை அச்சுறுத்திய சம்பவத்தில் இதுவரை ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ’இந்தியும், தமிழும் எங்கள் உயிர்’.. ஈரோடு திமுக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு!

மேலும், இளம்பெண்களை அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட ஆறு பேரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதால் பெரும்புள்ளிகள் தலையீடு இருக்குமோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?