பாலியல் தொழிலுக்கு அழைத்த திருநங்கைகள்? தடியடி நடத்திய போலீசார்.. வீடியோ வைரல் : வலுக்கும் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2024, 5:00 pm

காவல்நிலையத்தை அடித்து நொறுக்கிய திருநங்கைகள மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சில பகுதிகளில் இரவு நேரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத தேசியநெடுஞ்சாலை ஓரங்களில் திருநங்கைகள் வாகன ஓட்டிகளை வழிமறித்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல் கிணறு முதல் குமாரபுரம் வரை தேசிய நெடுஞ்சாலைகிளில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளை வழிமறித்து திருநங்கைகள் பாலியல் தொழில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு சுற்றித் திரிந்த திருநங்கைகளை அழைத்து அடித்து விரட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் 25க்கும் மேற்பட்டோர் பணகுடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அங்குள் பொருட்கள், பதாகைகள், பூந்தொட்டிகளை அடித்து நொறுக்கினர்.

மேலம் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது திருநங்கைகள் சிலர் ஆபாச வார்த்தைகளால் பேசி, உடைகளை கழற்றி வாக்குவாதம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் கடுப்பான போலீசார், திருநங்கைகள் மீது தடியடி நடத்தி விரட்டினர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

இந்த சம்பவத்திற்கு போலீசார் மீது அதிருப்தி தெரிவித்துள்ள நீலம் பண்பாட்டு மையம், திருநங்கைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்திய காவல்துறையை நீலம்பண்பாட்டுமையம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

பாலியல் தொழில் செய்வதாக பொய் குற்றச்சாட்டை சுமத்தி இரண்டு திருநங்கைகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருந்த காவல்துறையின் தவறான போக்கை கண்டித்து போராட்டம் நடத்திய திருநங்கை சங்கத்தை சார்ந்த அனைவரையும் காவல்துறையினர் கொடூரமாக தாக்கும் காட்சி சமூகவலைதளங்களில் பரவலாக வருகிறது.

தமிழ்நாடு அரசும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…