பெயில் ஆகி டியூசன் சென்ற 15 வயது சிறுவன்.. 23 வயது பெண்ணுடன் புதுச்சேரியில் பிடித்ததன் பின்னணி என்ன?
Author: Hariharasudhan1 January 2025, 3:14 pm
15 வயது சிறுவனுடன் டியூசன் டீச்சரின் 23 வயது தங்கை புதுச்சேரிக்கு டூர் சென்றதாக பிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை: கடந்த டிசம்பர் 16ஆம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில், பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகார் மனுவில், “என்னுடைய மகன் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்தான். ஆனால், அவன் தேர்ச்சி அடையவில்லை. எனவே, அதே பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரிடம் டியூசன் படித்து வந்தான்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 16ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்ற என்னுடைய மகன், இதுவரை வீடு திரும்பவில்லை. எனவே, அவனைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்தப் புகாரின் பேரில், போலீசாரும், மாயமான சிறுவனைத் தேடும் பணியில் இறங்கினர்.
இதன்படி, டியூஷன் படிக்கும் ஆசிரியையின் தங்கை, மற்றொரு இளைஞருடன் சேர்ந்து சிறுவன் உடன் புதுச்சேரிக்கு சென்றிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளானர். இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், மூவரையும் அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.
![Police caught 15 year old boy with 23 year girl in Puducherry](https://ffebb5a0.delivery.rocketcdn.me/wp-content/uploads/2025/01/Young-boy.jpg)
இதில், டியூஷன் ஆசிரியையின் தங்கை, சிறுவனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில், இதனை அறிந்த சிறுவனின் குடும்பத்தினர், அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் டியூஷன் ஆசிரியையின் தங்கை மீது புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, சிறுவன் குடும்பத்தினரும், டியூசன் ஆசிரியையின் குடும்பத்தினரும் சமாதானமாகச் செல்வதாக எழுதித் தந்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவி சங்கீதாவுடன் என்ட்ரி கொடுக்கும் விஜய்… மிரள வைக்கும் தவெக 2வது மாநாடு!!
இவ்வாறு இந்தச் சம்பவம் நடந்து 15 நாட்களுக்குள் சிறுவனைக் காணவில்லை என்று புகார் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், தற்போது அவர்கள் டூர் சென்றதாக கூறியுள்ளனர். எனவே, இருவரின் பெற்றோரையும் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பிய போலீசார், உடன் சென்ற ராகுல் என்ற இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.