சாலை நெடுக ஜல்லி கற்கள்.. சறுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்.. கால் கடுக்க அள்ளிய காவலர்கள்..!

Author: Vignesh
27 July 2024, 4:47 pm

சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லி கற்களை இரவோடு இரவாக சுத்தம் செய்த போக்குவரத்து காவலர்கள் நெகிழ வைத்த சம்பவம்.

ஈரோடு அடுத்த காளை மாடு சந்திப்பில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. ரயில்வே, நுழைவு பாலம் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், அவ்வப்போது தார் சாலை பழுதடைந்து விபத்து ஏற்படும் அபாயம் நிலவும்.

இருப்பினும், மாவட்ட நிர்வாகம் சார்பாக உடனடியாக பழுது பார்த்து போக்குவரத்து தடையின்றி நடைபெறும். அதன்படி, நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பாக ஜல்லி கல்லுகள் கொட்டப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டி இரவோடு இரவாக தாங்களாகவே சுத்தம் செய்தது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!