எப்படி வெளியானது.. வெகுண்டெழுந்த எதிர்ப்புகள்.. FIR-ஐ முடக்கிய காவல்துறை!

Author: Hariharasudhan
26 December 2024, 1:42 pm

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் FIR வெளியாகி சர்ச்சையான நிலையில், அந்த FIR-ஐ காவல்துறை முடக்கி உள்ளது.

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலம் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது.

இதில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி ஆகியவை இடம் பெற்றதால், சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக.

Anna University sexual harassment issue

இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பொறுப்பு. திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதையும் படிங்க: செல்போன் முழுக்க வீடியோக்கள்.. உடை மாற்றும் வீடியோ விற்கப்பட்டதா? ராமேஸ்வரம் விவகாரத்தில் திருப்பம்!

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின்” எனத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகார் தொடர்பான FIR விவரத்தை முடக்கி காவல் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

மேலும், ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட FIR விவரங்களை யாரும் பார்க்கவோ, தரவிறக்கம் செய்ய முடியாதபடி முடக்கினர். அது மட்டுமல்லாமல், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகார் தொடர்பான FIR விவரங்களைப் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒளிபரப்பப்பட்டாலோ, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 56

    0

    0

    Leave a Reply