நடிகர் விஜய் மீது பரபரப்பு புகார்… காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரால் TVK-வினர் ஷாக்..!

Author: Babu Lakshmanan
20 April 2024, 11:52 am

தேர்தல் விதிகளை மீறியதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மீது அளிக்கப்பட்ட புகாரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

18வது நாடாளுமன்றத்திற்கு முதற்கட்ட தேர்தலில், தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: “ஆவேசம்” படம் பார்க்க சென்றவர்கள் நிஜத்திலேயே ‘ஆவேசம்’… நள்ளிரவில் கோவையில் பிரபல திரையரங்கில் வாக்குவாதம்..!!!!

இந்தத் தேர்தலில் நடிகர் அஜித், விஜய் உள்பட பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இதில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களிக்க வரும் போது மட்டும், வாக்குச்சாவடியில் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் குவிந்தனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில், நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகே நடிகர் விஜய் வாக்களித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி வாக்குச்சாவடியில் 200க்கும் மேற்பட்டோர் அத்துமீறி கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் இந்தப் புகாரை அளித்துள்ளார். இது தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!