ரஜினி வீட்டில் போலீசார் விசாரணை நடத்த முடிவு : ஐஸ்வர்யா அலட்சியத்தால் வந்த வம்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2023, 1:52 pm

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வீட்டில் வேலை செய்த பெண்ணின் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா.

இதனையடுத்து ஈஸ்வரி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. அவருக்கு கணவரும், 3 மகள்களும் உள்ளனர். வங்கி வாயிலாக பணபரிமாற்றம் செய்த ஆதாரங்களும் கிடைத்துள்ளது.

நகை திருட்டு வழக்கில் சிக்கிய ஈஸ்வரி என்ற பணிப்பெண் மந்தைவெளியைச் சேர்ந்தவர். அவரது கணவர் பெயர் அங்கமுத்து. கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஈஸ்வரி வேலைக்கு சேர்ந்தார்.

நல்ல பெண் போல நடித்து ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவிடம் நெருக்கமாகியுள்ளார். ஐஸ்வர்யாவின் நம்பிக்கைக்குரியவராக மாறிய பின், ஐஸ்வர்யா நகை வைக்கும் லாக்கர் பெட்டியின் சாவி இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டார்..

அதன்பின்னர் சிறுக சிறுக நகைகளை திருடி சேர்க்க ஆரம்பித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு வங்கியில் கடன் வாங்கி சோழிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார் ஈஸ்வரி.

அதில் 2 மாடிகளுடன் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார். ஈஸ்வரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தவே, நகைகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

100 சவரன் நகை, 30 கிராம் வைர நைக, வெள்ளிப்பொருட்கள் என திருடியதை எல்லாம் நகைக்கடையில் விற்பனை செய்துள்ளார். இதற்கு உடந்தையாக இருந்தவர் ஓட்டுநர் வெங்கடேஷ். இதற்காக ஓட்டுநருக்கு 9 லட்சம் கமிஷன் கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்திடம் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த வெங்கடேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம் லாக்கரில் இருந்த நகைகள் எத்தனை சவரன் காணாமல் போனது என்று ஐஸ்வர்யாவுக்கே சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

முதலில் 60 சவரன் என கூறப்பட்டது. ஆனால் பணிப்பெண் பல கோடி கொடுத்து நிலம் வாங்கி, மகளின் திருமணத்தை முடிதது, மளிகைக் கடை வைத்துள்ளது பார்த்தால் இன்னும் எத்தனை நகைகள் திருடினார் என்பது தெரியவில்லை.

ஐஸ்வர்யா பொய் சொல்கிறாரா, அவரது பினாமி தான் இந்த பணிப்பெண்ணா என்பது குறித்து ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!