கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா : பக்தர்களுக்கு மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 8:14 pm

கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா : பக்தர்களுக்கு மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை!

கோவை பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட காளபட்டி பெரியார் நகர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சுமார் 27 கண்காணிப்பு கேமராவை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,கோவை மாநகரில் குற்றங்களை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் கண்காணிப்பு கேமராக்களை பொதுமக்களின் பங்களிப்புடன் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று காளப்பட்டி, சிங்காநல்லூர் சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.வாகன எண்கள்,மற்றும் குற்றவாளியின் முகங்களை துல்லியமாக கண்டுபிடிப்பதற்கு மாநகர பகுதியின் சந்திப்பு இடங்களில் அதி நவீன சிசிடிவி கேமரா என 4 மாதங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பீளமேடு காவல் நிலைய எல்லை பகுதி பெரியதாக உள்ளதால் இதே பகுதியில் மற்றொரு காவல் நிலையம் கூடிய விரைவில் வர உள்ளது.கோனியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.

கடந்த முறை நடைபெற்ற தேரோட்டதில் நகை பறிப்பு உள்ளிட்ட ஒரு சம்பவம் கூட நடைபெறவில்லை, தேரோட்டத்தையொட்டி தொலைநோக்கு கருவியுடன் போலீசார் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளின் நடமாடத்தை கண்காணிப்பதோடு 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளதாக தெரிவித்தார்.

  • Vidaamuyarchi AK Trisha Arjun regina salary விடாமுயற்சி படத்தில் அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரெஜினாக்கு டிமாண்ட்!