ஹெல்மெட் விவகாரத்தில் இளைஞரை மிரட்டிய காவலருக்கு ரூ.100 அபராதம்… இவ்ளோ பெரிய தொகையா? கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2022, 5:02 pm

இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்ட விதி உள்ளது. மேலும், இரு வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் அந்த விதி இருந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதே உத்தரவை சென்னை போக்குவரத்து காவல்துறை மீண்டும் பிறப்பித்தது.

இந்நிலையில், வாகன ஓட்டி மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், வாகன ஓட்டிகள் மற்றும் பின்சென்று செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஆனால், போலீசாரே பல நேரங்களில் ஹெல்மெட் அணியாமல் சீருடையில் பந்தாவாக வாகனம் ஓட்டி சென்று சர்ச்சையில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் தணிக்கையில் ஈடுபடும் சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசார் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் கண்டிக்கின்றனர்.

இந்த நிலையில், சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலரை வாகன ஓட்டி ஒருவர் ஹெல்மெட் போடுமாறு அக்கறையுடன் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர் அந்த வாகன ஓட்டியை வழிமறித்து ஒருமையில் பேசி ஆபாசமாக பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சமூக அக்கறையுடன் அறிவுறுத்திய நபரை மிரட்டியது மட்டுமல்லாமல், ” ஹெல்மெட் அணிவது என் பிரச்சினை, உனக்கு என்னடா” என்று கேள்வி கேட்கும் அந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து மிரட்டப்பட்ட இளைஞர் காசி மாயன் என்பவர், காவலர் கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.

ஹெல்மெட் அணியாமல் சென்றது மட்டுமல்லாமல் இளைஞரை மிரட்டிய போலீசாருக்கு வெறும் 100 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் நெட்டிசன்களிடையே கொதிப்படை செய்துள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 415

    0

    0