புதுக்கோட்டை அருகே தனது மகன் மீது அடிதடி வழக்கு பதிவு செய்த கீரமங்கலம் காவல்துறையினர், தன்னுடைய இருசக்கர வாகனத்தை எந்த காரணமும் இல்லாமல் பறிமுதல் செய்து விட்டு, திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாக கூறி பெண் ஒருவர் காவல் நிலையத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பனங்குளத்தைச் சேர்ந்தவர் கனகசிவம். இவரது மகன் விக்கிரமாதித்தன். இவருக்கும் குலமங்கலத்தைச் சேர்ந்த செல்லையா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு அடிதடியாக மாறியதால் ரத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கீரமங்கலம் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் விக்ரமாதித்தனை தேடிச் சென்ற போலீசார், அவரது அம்மா விஜயாவின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற இந்த பிரச்சனையின் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் இதுவரை திருப்பி கொடுக்கப்படவில்லை.
இது குறித்து விஜயா கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு பலமுறை சென்று கேட்டதாகவும், அவர்கள் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த விஜயா நேற்று கீரமங்கலம் காவல் நிலையத்தின் முன்பு தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனை கண்ட போலீசார், அதனை தடுத்து நிறுத்தி விஜயாவை காப்பாற்றினர். இதனால் கீரமங்கலம் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.