நாட்டு வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்ற ரவுடி.. அரிவாளால் வெட்டிய போது துப்பாக்கியால் சுட்டுபிடித்த போலீசார்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!!!
Author: Babu Lakshmanan28 September 2022, 1:54 pm
சோமங்கலம் அருகே பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை பிடிக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டியதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அந்த ரவுடியை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த கண்டிகை எருமையூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். இவர் மீது சோமங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலையில் உள்ளன. இவருடைய கேங் தாதாவான மேத்யூவுக்கும், மற்றொரு தாதாவான லெனின் கேங்கிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு பல கொலைகள் அரங்கேறி உள்ளது.
அதனைத் தொடர்ந்து, சச்சினை சோமங்கலம் காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் எருமையூர் அருகே உள்ள சாய்ராம் கல்லூரி அருகே சச்சின் பதுங்கி இருப்பதாக சோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சோமமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் சச்சினை பிடிக்க சென்றனர்.
அப்போது, சச்சின் தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசிள்ளார். அது வெடிக்காமல் செயல் இழந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, தான் கையில் வைத்திருந்த அரிவாளால் காவலர் பாஸ்கரை என்பவரை சச்சின் வெட்டி உள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த காவல் ஆய்வாளர் சிவகுமார் பிரபல ரவுடி சச்சினின் கால் பகுதியில் இரண்டு முறை சுட்டுள்ளார். இதில் தொடை பகுதியில் படுகாயம் அடைந்த ரவுடி சச்சின் கீழே சுருண்டு விழுந்துள்ளார்.
உடனே சச்சினை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.