அண்ணாமலையின் பொதுக்கூட்டத்திற்கு தடபுடலான ஏற்பாடு… போலீசார் போட்ட திடீர்… அவசர அவசரமாக மேடையை அகற்றிய பாஜகவினர்…!

Author: Babu Lakshmanan
28 November 2023, 8:49 am

மன்னார்குடியில் அண்ணாமலையின் பிரச்சார பொதுக்கூட்ட மேடையை போலீசாரின் உத்தரவை தொடர்ந்து, அவசர அவசரமாக பாஜகவினர் அகற்றினர்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான தொடக்க மணியை எழுப்பியவர் பாஜக தலைவர் அண்ணாமலை. ‘என் மண், என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்திலிருந்து கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து ஆறு மாதங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் என் மண், என் மக்கள் எனும் தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சார நடைபயணத்திற்கு தேரடியில் பிரச்சார பொதுக்கூட்ட மேடை அமைக்க பாஜகவினர் காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அனுமதி மறுத்தார்.

இருப்பினும், அனுமதியை மீறி பாஜகவினர் பிரச்சார பொதுக்கூட்ட மேடை அமைத்தனர். இது குறித்து தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், மேடையை பிரிக்க பாஜகவினருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் தொழிலாளர்கள் அவசர அவசரமாக மேடையை பிரித்து டாடா ஏசி வாகனத்தில் ஏற்றி சென்றனர். பாஜகவினர் பொதுக்கூட்ட மேடையை பிரித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!