‘நீ என்ன பெரிய ரவுடி-யா… கொ••••’ கையெழுத்திட வந்த நண்டு வியாபாரியை தாக்கிய இன்ஸ்பெக்டர்… சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
10 October 2022, 5:00 pm

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வந்த நண்டு வியாபாரியை காவல் ஆய்வாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் ரவி. இவர் நண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், மற்றொரு நண்டு வியாபாரியான டென்னிஸ் என்பவருக்கும், தொழில் போட்டி காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், டென்னிஸ் ரவி மீது தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 22ம் தேதி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ரவியை போலீசார் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், ரவி தூத்துக்குடி நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதை தொடர்ந்து, தாளமுத்து நகர் காவல்நிலையத்தில் கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

இதனால், நேற்று காவல் நிலையத்திற்கு கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வந்த ரவியை காவல் ஆய்வாளர் மணிமாறன் என்பவர் ரவியை, ‘எப்படி முன்ஜாமின் பெறலாம்..?’ என மிரட்டி அவரை அடித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://player.vimeo.com/video/758686161?h=1420cb5564&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 514

    1

    0