விசாரணைக்கு சென்ற இடத்தில் பெண்ணை தாக்கி செல்போனை பறிக்க முயன்ற காவல்துறை உதவி ஆய்வாளர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

Author: Babu Lakshmanan
27 September 2022, 6:06 pm

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் பெண்ணின் வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளர், அந்த பெண்ணை தாக்க முயன்று செல்போனை பறிக்க முயலும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு நடுவூர்கரை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ். இவரது மனைவி லில்லி ஜனட். இவர் கடந்த 14-ம் தேதி மண்டைக்காடு காவல் நிலையத்தில் பக்கத்து வீட்டை சார்ந்த ஐயாதுரை சில நபர்களுடன் சேர்ந்து, அரசின் உரிய அனுமதியின்றி கோயில் ஒன்றை கட்ட முயற்ச்சிப்பதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த நிலையில், அந்த புகார் சம்பந்தமாக விசாரணைக்கு 24ம் தேதி அன்று மண்டைக்காடு காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், லில்லி ஜனட் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது லில்லி ஜெனட் போலீசார் வந்த தகவலை தனது கணவருக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் முரளிதரன் லில்லி ஜனட்-ஐ அடிக்க முயன்றதோடு அவரது செல்போனையும் பறிக்க முயன்றுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 885

    0

    0