பெண்களை வீடியோ எடுத்த காவலர்.. கோவை பஸ் ஸ்டாப்பில் அதிர்ச்சி

Author: Hariharasudhan
19 October 2024, 12:59 pm

கோவை பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டு பெண்களை வீடியோ எடுத்த போக்குவரத்து காவலரிடம் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு ஒரு நபர் தனது செல்போனில், அந்த வழியாகச் செல்லும் பெண்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் கவனித்துள்ளனர். பின்னர், அந்த நபரைப் பிடித்து, எதற்காக வீடியோ எடுக்கிறாய் எனக் கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர் சற்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அந்த நபரை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் பாலமுருகன் என்பதும், போக்குவரத்து காவலராக பணிபுரிவதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : நெருங்கும் தீபாவளி.. உச்சத்தில் காற்று மாசுபாடு.. ஆட்டம் காணும் தலைநகரம்!

தொடர்ந்து அவரிடம் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் உள்ள வீடியோ குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 223

    0

    0