வீட்டில் தனியாக இருந்த மாமியார்.. மருமகன் மீது போலீசின் பார்வை.. தேனியில் பரபரப்பு!

Author: Hariharasudhan
19 December 2024, 6:02 pm

தேனியில் வீட்டில் இருந்த பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி: தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியில் லீலாவதி (37) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி உள்ளது. இந்த நிலையில், லீலாவதி இன்று (டிச.19) காலை அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்து உள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த அல்லிநகரம் போலீசார், லீலாவதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேநேரம், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். போலீசாரின் இந்த முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட லீலாவதியின் கணவர் சின்னச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.

Theni Allinagaram woman murder

அதன் பின்னர் லீலாவதி, தனது மகள் கௌசல்யாவை திண்டுக்கல் மாவட்டம், மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால், திருமணம் முடிந்த சில காலங்களில் கௌசல்யா – பிச்சைமுத்து தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது தகராறு வரை சென்று உள்ளது.

இதையும் படிங்க: ’மிடில் கிளாஸ் மக்களே கிரெடிட் கார்டு வேண்டாம்’.. ஓட்டுநரின் திடீர் மரணம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

இதனால் கணவரைப் பிரிந்த கௌசல்யா, தேனியில் உள்ள தனது தாயார் லீலாவதி வீட்டில் தங்கி, ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால், அடிக்கடி அல்லிநகரத்துக்கு வரும் பிச்சைமுத்து, மனைவி கௌசல்யா மற்றும் மாமியார் லீலாவதி உடன் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிச்சைமுத்து லீலாவதியைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

  • Atlee and assistant directors relationship அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!
  • Views: - 60

    0

    0

    Leave a Reply