செல்போன் முழுக்க வீடியோக்கள்.. உடை மாற்றும் வீடியோ விற்கப்பட்டதா? ராமேஸ்வரம் விவகாரத்தில் திருப்பம்!

Author: Hariharasudhan
26 December 2024, 12:50 pm

ராமேஸ்வரம் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள் மீட்கப்பட்டது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உலகப் புகழ்பெற்ற ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு, தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில், இந்தக் கோயிலின் அருகே உள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடும் பக்தர்கள், கடற்கரை அருகே உள்ள தனியார் உடைமாற்றும் அறைகளில் உடைகளை மாற்றிவிட்டு கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கடலில் நீராடி விட்டு அதன் அருகில் இருந்த உடைமாற்றும் அறைக்குச் சென்றனர்.

அப்போது, அந்த இளம் பெண் அங்கு ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ்களை உற்று நோக்கிய போது சந்தேகம் அடைந்து உள்ளார். இதனையடுத்து, அதனை சோதனைச் செய்த போது ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்து உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Rameswaram dress changing room

இதனைத் தொடர்ந்து அங்கு சோதனை செய்த காவலர்கள், மூன்று அறைகளிலும் இருந்த ரகசிய கேமராக்களைக் கைப்பற்றினர். பின்னர், இது தொடர்பாக டீக்கடை உரிமையாளரான ராமேஸ்வரம் தம்பியான் கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா மற்றும் டீ மாஸ்டர் மீரான் மைதீன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘பாலியல் குற்றவாளிகளின் கூடாரம் பாடசாலைகள்.. பேய் ஆட்சி’.. இபிஎஸ் கடும் விமர்சனம்!

இந்த விசாரணையில், ஆன்லைனில் ரகசிய கேமராக்களை வைத்து மறைத்து வைத்துள்ளார். இதன் மூலம், கடந்த சில மாதங்களாக இந்த அறையில் உடைமாற்றும் பெண்களின் அந்தரங்க வீடியோக்களைக் கொண்டு, வயர்லெஸ் கனெக்சன் மூலம் செல்போனில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துள்ளார்.

மேலும், தற்போதைய நிலவரப்படி, இந்த கேமராக்கள் மூலம் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கைப்பற்றபட்டு உள்ளதாகவும், இந்த வீடியோக்களை வேறு யாருக்கேனும் அனுப்பி உள்ளனரா என்பது குறித்து, கைது செய்யப்பட்ட இருவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 64

    0

    0

    Leave a Reply