வேறு நபருடன் சென்ற மனைவி.. ஸ்கூருடிரைவரை தலையில் இறக்கிய கணவன்!

Author: Hariharasudhan
20 November 2024, 6:06 pm

நாமக்கலில் வேறு ஒரு நபருடன் சென்ற மனைவியை ஸ்கூருடிரைவரால் கொடூரமாகத் தாக்கிய கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல்: சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை அருகே வண்டிக்காரன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிருந்தா. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மேலும், கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டுப் பிரிந்த பிருந்தா, கடந்த 2 ஆண்டுகளாக நாமக்கல்லில் தனியாக வசித்து வந்து உள்ளார். அதேநேரம், தம்பதியின் இரு பிள்ளைகளும் தந்தை மணிகண்டனிடம் வளர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேலை காரணமாக, சேலத்தில் இருந்து நாமக்கலுக்கு மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் வந்து உள்ளார். அப்போது, நாமக்கல் மோகனூர் சாலையில் பிருந்தா வேறு ஒரு நபர் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். இதனைப் பார்த்த மணிகண்டன், உடனடியாக பிருந்தா சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து நின்று உள்ளார்.

HUSBAN ATTACKED WIFE BY SCREWDRIVERs

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்து இருந்த ஸ்கூருடிரைவரை எடுத்து, பிரிந்தாவின் தலையில் இறக்கி உள்ளார். இதனால் வலியால் துடித்த பிருந்தா சாலையில் சரிந்து விழுந்து உள்ளார்.

இதையும் படிங்க: வீட்டிலே பிரசவம் பார்ப்பதற்கு வாட்ஸ்ஆப் குழு.. மருத்துவத்துறையை உலுக்கிய சென்னை சம்பவம்!

பின்னர், அக்கம் பக்கத்தினர் வந்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்று உள்ளனர். பின்னர், இது குறித்த தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனை அங்கு இருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!