Ex டிஐஜி மகன் வீட்டில் ஆப்பிரிக்க பெண்களை வைத்து பாலியல் தொழில்.. கூண்டோடு சிக்கியது எப்படி?

Author: Hariharasudhan
28 November 2024, 3:02 pm

சென்னையில் ஓய்வுபெற்ற டிஐஜி மகன் வீட்டில் பாலியல் தொழில் நடத்தப்பட்டது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவரின் மகனுக்குச் சொந்தமான வீடு உள்ளது. காவல்துறை அதிகாரியின் மகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், அந்த வீட்டை இலங்கையைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.

அந்த வீட்டை நிர்மலா, விருந்தினர் விடுதியாக (Guest House) பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அந்த வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சென்னை கோயம்பேடு காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதனையடுத்து, அந்த வீட்டை போலீசார் கண்காணித்தபோது, அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த சில பெண்கள் தங்கியிருப்பதும், அந்த வீட்டுக்கு சிலர் வந்து செல்வதும் தெரிய வந்து உள்ளது.

பின்னர், இதுகுறித்த தகவல் போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து, உடனடியாக அந்த வீட்டில் சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கோயம்பேடு போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்குப் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல், பாலியல் தொழிலுக்காக லொகாண்டோ எனப்படும் செல்போன் செயலி ஒன்று மூலம் இந்த வீட்டுக்கு வருபவர்கள் அங்கு தங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.

Sexual work in Ex DIG house in Koyambedu police investigates

மேலும், அந்த வீட்டில் இருந்து கஞ்சா பொட்டலங்கள், 23 செல்போன்கள், கார்கள், பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்த பெண்கள் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த பெண்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: 10 வருடம் வாய்ப்பில்லாமல் தவித்த நடிகை.. இயக்குநர் கெஞ்சியதால் நடித்த படம் BLOCKBUSTER!

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து 8 பெண்களை போலீசார் மீட்டு உள்ளனர். அது மட்டுமின்றி, 3 பேரைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 181

    0

    0