செங்கல் சூளையில் கேட்ட அலறல் சத்தம்.. தப்பியோடிய காதல் கணவர்!
Author: Hariharasudhan8 March 2025, 6:54 pm
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி, பருத்திக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர்கள் தமிழரசன் – ரேவதி தம்பதி. இந்த தம்பதிக்கு புவனேஸ்வரி (20) இருந்தார். அதேநேரம், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த கீழ்வன்னிப்பட்டு அம்பலகாரத் தெருவில் வசித்து வருபவர் சபரி (23).
இந்த நிலையில், சபரி – புவனேஸ்வரி இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புவனேஸ்வரி மற்றும் சபரி தம்பதி வேலை பார்த்து வந்த செங்கல் சூளையில், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு புதுமணத்தம்பதி வந்து தங்கியிருந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் புவனேஸ்வரியின் குடிலில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். அப்போது, புவனேஸ்வரி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். தொடர்ந்து, சபரி அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.
இதையும் படிங்க: திடீரென கொதித்த விஜய்.. நாகையில் நடந்தது இதுதான்!
இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த போலீசார், புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான சபரியைக் கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.