‘கொலை செஞ்சவன கூட விட்டுருவேன், ஆன, இதுக்கு ஒத்துக்க மாட்டேன்’.. தயவு செய்து ஸ்கூலுக்கு அனுப்பு; பாராட்டுக்களை குவிக்கும் காவலரின் செயல்!!

Author: Babu Lakshmanan
17 April 2023, 4:53 pm

திருவள்ளூர் ; திருவள்ளூரில் காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் என்பவர் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக சமூக வலைதளங்களில்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர் பேட்டை கிராமத்தில் அமைந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் பியூலா. இவர் பணியாற்றி வரும் பள்ளியில் 50 மாணவ, மாணவியர்கள் கல்வி கற்று வந்தனர்.

பட்டியல் இன பழங்குடியினர் வசிக்கும் திடீர் நகர் பகுதியில் இருந்து 11 மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வராமல் இடையில் நின்று போயினர்.

இந்த நிலையில் தலைமையாசிரியையின் கோரிக்கையை ஏற்று பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் திடீர் நகர் பகுதியில் பழங்குடி மாணவர்களின் கல்வி எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களது பெற்றோர்களிடம் நேரில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

“தவறு செய்தால் கூட விட்டு விடுவேன். படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்,” என்று படிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறி நூதனப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இதையடுத்து, பள்ளிக்கு செல்லாமல் இருந்த அனைத்து மாணவர்களும் மீண்டும் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதியுள்ளனர்.

மாணவ, மாணவியர்களின் கல்வி எதிர்காலத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது. இதனால், தற்போது இடையில் கல்வியை நிறுத்திய மாணவ, மாணவியர்கள் மீண்டும் தங்களது கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது.

காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரமசிவன் மேற்கொண்ட நூதன விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 505

    0

    0